விதிமுறைகள்

  • சீட்டுகளில் சேர விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பத்தாளை (இரண்டு ) பூர்த்தி செய்து , முதல் தவணை தொகையை ரொக்கமாகவோ அல்லது காசோலை அல்லது மணியார்டர் அல்லது டிராப்ட் மூலமாகவோ செலுத்தி சந்தாதாரர்களாக சேர்ந்து கொள்ளலாம் .
  • முதல் மாத தவணைக்கு ஏலம் இல்லை அதை கம்பெனியே எடுத்துக்கொள்ளும். இரண்டாவது ஏல தேதிக்கு முன்பே , இரண்டாவது தவணைக்கான முழு தொகையையும் செலுத்த வேண்டும் .
  • ஏலத்தேதி அங்கத்தினர்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும் . தவணை தொகையை கட்டாத அங்கத்தினர்களையும் மற்றும் இரண்டு , மூன்று தவணைகளுக்கு ஒன்றாக பணம் செலுத்தும் அங்கத்தினர்களையும் அந்த மாதம் ஏலத்தில் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது .
  • சந்தாதாரர்கள் ஏலத்தில் நேரிலும் டெண்டர் மூலமாகவும் அல்லது தனது சார்பில் அதிகாரக் கடிதமளிக்கப்பட்ட நபர் மூலமாகவும் கலந்து கொள்ளலாம் .ஏலம் கோர யாரும் வராதிருத்தலும் டெண்டர் இல்லை என்றாலும் நமது கம்பெனி விதிகளின்படி குறைந்த அளவு தள்ளுபடிக்கு குலுக்கலில் முடிவு செய்யப்படும் .
  • சீட்டு எடுக்காத அங்கத்தினர்கள் இடையில் பணம் கட்டஇயலாமல் குரூப்பிலிருந்து விலக நேரிட்டால் அவர்கள் அதுவரை கட்டிய தொகையில் (கசர் லாபம் இல்லாமல் ) கம்பெனியின் பிடித்தங்கள் நீக்கி மீதமுள்ள தொகையை சீட்டுக்கலாம் முடிந்த பின்னர் பெற்றுக் கொள்ளலாம் . அதற்கு முன்னதாக பெற இயலாது .
  • ஒவ்வொரு மாதத்திலும் ஏலத்தள்ளுபடியில் ஏலம் கோரப்பட்ட தொகையில் (5%) ஐந்து சதவீதம் கழித்து மீதியை எல்லா சந்தாதாரர்களுக்கும் சமமாக பகிர்ந்து கொடுக்கப்படும் .
  • 2-க்கும் மேற்பட்ட தவணைகளை தாமதமாக செலுத்தும் நபர்கள் அதற்குண்டான அபராதத் தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டும்
  • தவணை தொகை செலுத்தாத அங்கத்தினர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது .
  • சீட்டுக் காலம் முடியும் வரையில் குறிப்பிட்ட தேதியிலோ அல்லது முன்னரோ தவறாமல் சந்தா செலுத்தும் அங்கத்தினர்களுக்கு சீட்டு தொகையில் ஒரு சதவீதம் சிறப்பு போனஸ் வழங்கப்படும்.
  • செக்குகள் குறிப்பிட்ட தவணைத் தேதிக்குள் வங்கியில் மாற்றப்பட வேண்டும்.
  • எந்த ஒரு தவனையாவது குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தவறினால் சிறப்பு போனஸ் வழங்கப்படமாட்டாது.
  • கம்பெனியின் வசூலிப்பவர் மூலம் சந்தா தொகையினை செலுத்தி ரசீது பெற்று கொள்ள வேண்டும் . மணியார்டர் , டிராப்ட் மூலமாகவும் சந்தா செலுத்தலாம் .
  • ஏலம் எடுத்தவருக்கு ஏலம் எடுத்த தேதியில் இருந்து 20 நாட்கள் கழித்து தொகை கொடுக்கப்படும்.
  • ஏலம் எடுத்தவர்கள் ஏலம் முடிந்தவுடன் தக்க பொறுப்புகள் கொடுத்து சீட்டு தொகையினை பெற்று கொள்ளலாம் .
  • சந்தாதாரர்கள் ஒரு சீட்டில் மூண்டு தவணைகளுக்கு மேல் பாக்கி வைத்திருந்தால் அந்த சீட்டை அவர் பெயரிலிருந்து நீக்கிவிட கம்பெனிக்கு முழு உரிமை உண்டு .
  • ஏலச்சீட்டின் உச்ச வரம்பு குறுகிய காலச் சீட்டுகளுக்கு 30% நீண்ட காலச் சீட்டுகளுக்கு 40% (அவ்வப்போது அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றத்திற்குற்பட்டது ).
  • மத்திய மற்றும் மாநில அரசுகளால் அவ்வப்போது விதிக்கப்படும் வரிகளை சந்தாதாரர்களிடம் இருந்து வசூலிக்க நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு.
  • அலுவலக நேரம் : காலை 9.00 முதல் மதியம் 1.00 மணி வரை
                                       மாலை 4.00 முதல் இரவு 8.00 மணி வரை
  • 1 இலட்சம் 25 மாதங்கள்
  • 2 இலட்சம் 25 மாதங்கள்
  • 5 இலட்சம் 25 மாதங்கள்
  • 10 இலட்சம் 25 மாதங்கள்
  • 12 இலட்சத்து 50 ஆயிரம்
    25 மாதங்கள்
  • 15 இலட்சம் 25 மாதங்கள்
  • 2 இலட்சம் 40 மாதங்கள்
  • 5 இலட்சம் 40 மாதங்கள்
  • 6 இலட்சம் 40 மாதங்கள்
  • 10 இலட்சம் 40 மாதங்கள்
  • 25 இலட்சம் 40 மாதங்கள்
back to top